Friday, May 24, 2013



                மூலிகை இயற்கை நமக்கு அளித்த மிகப்பெரும் கோடை. நம்மில் எத்தனை பேர் அவற்றை முறையாக அறிந்து கொண்டிருக்கிறோம்? கிராமங்களில் சாலையோரம், வயல்வெளிகளில்,ஆற்றுப்படுகைகளில், எத்தனை எத்தனை அருமையான, நம் உடல் நலம் பேணக்கூடிய மூலிகைகள் வளர்ந்து இருக்கின்றன!

         அருமையான ஒரு மூலிகை,குப்பைமேனி எங்கும் காணக் கிடைக்கும்.அந்த மூலிகை மிக அருமையான உடல் நலம் பேணும் மருத்துவ குணம் கொண்ட ஒரு மூலிகை.

வெளிப்பூச்சாக சிரங்கு,தேமல் போன்ற தோல் நோய்களுக்கும், உள்ளுக்கு மருந்தாக மிளகு சேர்த்து முழுச் செடியும் நம் உடல் இரத்தத்தை சுத்தம் செய்யும் பணியை சிறப்பாக செய்யும்.

இப்படி எத்தனை எத்தனை மகத்துவம் கொண்ட மூலிகைகள் நம் அருகில்.

அறிவோம் மூலிகைகளை! உடல் நலம் காப்போம் , இயற்கை அளித்த பக்க விளைவுகள் இல்லாத வரம் - மூலிகைகள்!

நாம் மூலிகைகள் பயன்படுத்த ஆர்வமாக இருக்கிறோம் ஆயினும் நாம் இருக்கும் வாழ்வியல் சூழலில் , மூலிகைகளை தேடிச் செல்ல முடிய வில்லை என்று வருந்துபவர்களுக்கும்  , மூலிகை மூலம் நிவாரணம் தேட எண்ணும் நண்பர்களுக்கும், இத்தளம் தன்னாலான உதவிகள் செய்யும்.


Friday, May 10, 2013

கோடையில் வீட்டில் இருக்க, முடிய வில்லையா?




அக்னி நட்சத்திரம் ஆரம்பித்து விட்டது, 

வீட்டிலே , இரவு நேரம் சுத்தமாக தூங்க முடிய வில்லை, பகலிலே, கேட்கவே வேண்டாம்!
எல்லோரும் ஏசி வைத்துக்கொள்ள முடியுமா?
அல்லது 
எல்லோரும் தான் குளுகுளு ஊட்டி,கொடைகானல் , 
இல்லை கொல்லி மலை, ஏற்காடு செல்ல முடியுமா?

அந்த சூழலை , குளுமையான , மனதிற்கு இதமான அந்த குளிர் தட்ப நிலையை நாம் இருக்கும் இடத்தில் அனுபவித்தால் , ? 

நினைக்கவே , பரவசம்!
நடந்தால் ?
அற்புதம்!

ஆம், நாம் இருக்கும் இடத்திலேயே  , குளிர் சூழலை உருவாக்குவோம்!
ஏசி இல்லாமலே!

எப்படி?

கொஞ்சம் தண்ணீர் , கொஞ்சம் முயற்சி , அவ்வளவே!
முதலில் , நம் வீட்டு சன்னல்!

வீட்டில் உள்ள பாய் , இல்லை என்றால் படுக்கை விரிப்பு எடுத்து, நன்கு தண்ணீரில் ஊர வைத்து, சன்னலில் கட்டி விடுங்கள்!

தரையில் தண்ணீர் ஊற்றி , சற்று தேங்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்!

மிக மிக கவனம் , தரையில் தண்ணீர் இருக்கும் போது பார்த்து நடக்கவும்!

அதிலும் வயதானவர்கள் இருந்தால், தரையில் தண்ணீர் ஊற்றுவதை தவிர்த்து விட்டு, சன்னலை மட்டும் ஈரத்துணியோ அல்லது பாயோ கொண்டு கட்டவும்!
சன்னல் அவசியம் திறந்திருக்க வேண்டும்!

அப்போதுதான் ,வெளிக்காற்று , உள்ளே நமக்கு குளுமையைத் தரும்!

வீட்டின் மேலே மொட்டை மாடி இருந்தால் , அதிலும் தண்ணீர் தெளிக்க வேண்டும்! மாடியில் தண்ணீர் தெளிக்க , மாலை வேலை உகந்தது !

மற்ற படி, வீட்டில் தண்ணீர் தெளிக்க , சன்னலை ஈரத்துணியால், அடைக்க, காலை வேலை உகந்தது!

தண்ணீர் தெளிக்கும் பொது, வீட்டில் உள்ள FAN ஐ ,ஆப் செய்து விடுங்கள், சற்று நேரம்!

பிறகு , பேன் போட்டுக்கொள்ளலாம்!

இப்போது , உங்கள் இல்லம் , ஏசி இல்லாமலே, குளுகுளு வென இருக்கும்!

வெட்டி வேர் , சந்தனம் போன்றவற்றை சன்னலில் ஈரத்துணியுடன் சேர்த்துக்கட்ட, குளுமையுடன் , மனதிற்குப் புத்துணர்வையும் தரும்!

இந்த கோடையில் , குடிக்கவே தண்ணீர் இல்லை, இதில் அதிக தண்ணீருக்கு எங்கே செல்வது என்று கேட்காதீர்கள், சன்னலுக்காவது, ஈரத்துணியை, பயன்படுத்தி, கோடை வெப்பத்திலிருந்து, உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்!

எளிய முறை தானே, செய்து பாருங்கள் ,
பலனைச் சொல்லுங்கள் உங்கள் சுற்றத்தார்க்கு!


Total Pageviews