Tuesday, December 23, 2014

ஆங்கிலேய புத்தாண்டு தினம் தான் , நம்மை நாம் மாற்றும் தினமா?

வணக்கம் !

தொன்மையான பழந்தமிழர் மரபில் நாம் வாழ்ந்தாலும், வழி நடந்தாலும் ,அல்லாவிடினும், நமது வாழ்வியல் நடைமுறைகள் எல்லாம் ஆங்கிலேயர் வழி வந்த கிருத்துவ வருட கணக்கில் தான் கடைபிடிக்கப்படுகிறது, அத்தகைய நடைமுறைகளின் ஒரு அங்கமாக இந்த ஆண்டு இன்னும் சில தினங்களில் முடிவடைய இருக்கிறது.

ஆண்டுகள் எதனடிப்படையின் கீழ் கணக்கிட்டாலும், அதற்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவம் ஒன்றுதான், நம்முடைய வயதுகளின், சூழ்நிலைகளின்   அடிப்படையில் அதன் கொண்டாட்டங்கள் அமைந்தாலும், நாம் நம்முடைய சில விடநினைக்கும் அல்லது ஆரம்பிக்க நினைக்கும்  விசயங்களை , ஒரு உத்வேகத்துடன் அந்த எண்ணத்தினை நடைமுறைப்படுத்த தேர்ந்தெடுக்கும் நாள் தான் இந்த ஆங்கிலேய  புத்தாண்டு தினம். 

இந்த வருடக்கடைசியில் அத்தகைய விசயங்களில் அதிகம் ஈடுபட்டுக்கொண்டு , நான் இதிலிருந்து  புத்தாண்டு தினம் முதல் விடுபட்டுவிடுவேன் என சமாதானம் கூறிக்கொண்டு விட நினைக்கும் செயல்களில் அதிகம் ஈடுபடுவோர் ஏராளம்.

நாம் நம்முடைய பழம்பெருமை நினைத்து போற்றி, விட்டு விடுதலையாகும் மனமிருந்தால் எத்தகைய அல்செயல்களிருந்தும் எப்போது வேண்டுமானாலும்  விடுபடலாம், நலமுடன் வாழலாம்!

அல்லது ஆரம்பிக்க நினைக்கும் விசயங்களை, நினைத்த அன்றே  ஆரம்பிக்கலாம் அல்லவா?

ஆங்கிலேய புத்தாண்டு தினம் தான் , 
நம்மை 
நாம் மாற்றும் தினமா?

முடிவெடுத்த கணமே, 
நமக்கு 
புத்தாண்டு தானே! 

சிந்திப்போம்! 
பழமை போற்றுவோம்!! 
பாரம்பரியம் காப்போம்!!!

அன்பன்,

ஞானகுமாரன்.


*** கடந்த  ஆண்டு வெளியீட்டின் மறு பதிப்பு!

Thursday, December 11, 2014

மகாகவி

இன்று முண்டாசுக்கவிஞனின் பிறந்த நாள்!


தரணியெங்கும் தமிழர்க்கெல்லாம் தனிப்பெரும் அடையாளமாகத்திகழும், எம் மகாகவியின் பிறந்த நாள்!

தமிழ்தேசம் ஆண்ட மூவேந்தர் போல வாழும் காலத்தில் பெரும்பெயருடனும் வளமுடனும் பொருளுடனும் வாழவில்லை! ஆயினும், 
எம் தமிழ் மக்களுக்கு அஞ்சாமை தந்தான்! 
பரங்கியருக்கு அடிபணியா வீரம் தந்தான்! 
சுதந்திர வேட்கை கொண்ட எம்தமிழருக்கு தமிழ்வேள்வி படைத்தான்! தனியனாய் போராடினான்! தமிழ் கொண்டே! 
சமூக நீதிக்காகவும்! தமிழர் தலை நிமிர்ந்து வாழவும்!
சரித்திரமாய் வாழ்கிறான்! 
தமிழ் உள்ளவரை நின் புகழ் உலகாளும் அய்யா! 
சாதிய சமூக விலங்கு அறுத்த தமிழ் சீராளியே!
வணங்குகிறோம் உம்மை! 
வாழிய வாழியவே!!


தேடி சோறு நிதம் தின்று 
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி 
மனம் வாடி துன்பம் மிக உழன்று 
பிறர் வாட பல  செயல்கள் செய்து 
நரை கூடி கிழப்பருவம் எய்தி -
கொடும்கூற்றுக்கு இரையென மாயும் 
பல வேடிக்கை மனிதரைப்போலே 
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?

மகாகவி.சுப்ரமணிய பாரதியார்.






Total Pageviews