Sunday, January 28, 2018

புலனடக்கம் இல்லா, தவம்!

மனிதர் நல்வழி வாழ வேண்டிய அவசியத்தை விளக்கும் தொன்மையான நீதிநெறி நூல், ஏலாதி.

ஆறு வகை மூலிகைகள் சேர்ந்த மனிதர் உடல் நலம் காக்கும் மருந்தை, ஏலாதி என்பர். அதுபோல, ஆறு வகையான தத்துவங்கள் மூலம் மனிதர் வாழ்வு செழிக்க வழிகாட்டும் நூல் ஏலாதி ஆகும்.

பதினெண்கீழ்க்கணக்கு நூலான ஏலாதியின் ஒவ்வொரு பாட்டிலும் ஆறு தத்துவங்கள் இருக்கும், அவற்றை வாழ்வில் கடைபிடித்தால், வாழ்வு சிறப்பாகும் என்றனர், நம் முன்னோர்.

காலம் கடந்து தற்கால வாழ்வுக்கும், அதன் பல பாடல்கள் பொருந்துகின்றன, அப்படி ஒரு பாடல் இதோ!

புலன் வழியில் செல்லும் வாழ்க்கையின் துன்பம்.
எழுத்தினால் நீங்காது, எண்ணால் ஒழியாது, ஏத்தி
வழுத்தினால் மாறாது, மாண்ட ஒழுக்கினால்,
நேராமை,சால உணர்வார் பெருந்தவம்,
போகாமை, சாலப் புலை.

பிறப்பில்லாப் பெருவாழ்வு தேடுபவர்களின் வாழ்க்கைத்துன்பங்கள், கற்ற கல்வியினாலோ, ஈடுபடும் தியானத்தினாலோ, இறை புகழ் பேசுவதாலோ தீராது, ஐம்புலன்களையும் அடக்கி, மேற்கொள்ளும், தூய்மையான தவத்தால் மட்டுமே, விலகும்.

பிறந்த பிறவியின் துன்பங்கள் விலக, புலனடக்கம் இன்றி, மனதின் எண்ணங்களின் வழியே பிறவியைக் கழிக்கும் மனிதர்களின் இறை நாட்டம், மிகவும் தவறு என்கிறது, ஏலாதி நீதிநெறி நூல்.

Saturday, January 27, 2018

ஆசிரியர் இல்லா வகுப்பறை!

எங்கெங்கு நோக்கினும்,  எல்லோரும் 
தன்னிலை கடக்கிறார்கள்!
சுய ஒழுக்கம் மறக்கிறார்கள்.

இயல்பை மீற, எல்லோருக்கும் 
ஒரு காரணம் இருக்கிறது!

நித்தம் ஒரு கூட்டம், 
சமூக வெளியில் தம் 
பக்குவம் காட்ட,

பாயும் ஊடகங்கள், 
ரேட்டிங் இரை தேடுவதில், 
கடமையை மறக்கும் 
அவலம் எங்கினும் !

ஆன்றோரும் சான்றோரும் 
வழி நடத்திய  எம் தேசம்,
இன்று,

ஆசிரியர் இல்லாத 
வகுப்பறை!

கண்டிப்பார் இல்லா 
காட்டுக்கூச்சல் 
காதைப் பிளந்தாலும்,

விரைவில் ஆசிரியர், 
நிச்சயம் வருவார்!

கையில் பிரம்புடன், கண்டிப்பாக..!









Thursday, January 25, 2018

இப்போது புதிதாக!





இப்போது புதிதாக,
இந்த வினாடி,
தொடங்குவோம், வாருங்கள்!

யார் பெருமை கொண்டாடினாலும், யார் சொந்தம் 
கொண்டாடினாலும், நாம் அதை எண்ணாமல் 
அடிக்கல்லை நாட்டுவோம்!

நாமறிவோம், ஆரம்பத்துக்கும், 
அடிக்கல் நாட்டுவதற்கும்
வராத கூட்டங்கள், 

உயர்ந்தபின், பெருமை பேசும் என்பதை!
அதைப் பற்றி என்னாது, செல்லும் வழியை மனதில்
நிறுத்தினால், எல்லோர்க்கும் நலமே விளையும்!

சுயநலம் விடுத்த 
பொதுநலம் காப்போம்!

கால வெள்ளத்தில் நாம், 
ஒரு துகள் கூட அல்ல, 
என்பதை உணர்ந்து,

மமதையை அழித்து,
மனிதம் போற்றுவோம்!!

Monday, January 22, 2018

தாய்!




அன்பின் வடிவம், 
அஹிம்சையின் தத்துவம்!

தன்னலம் கருதா, 
தூய உள்ளம்!

என்றும் தாய், 
தாய்தான்!

எண்ணங்களில் ஏற்றம் 
கொண்டால்,
எல்லாம் வளமாகும்!

பெண்ணும் தாயாவாள்!


* Pencil Art Courtesy - Melissa.Barreiro. USA.

Tuesday, January 16, 2018


எழுத்தும் கலையும்
தனி நபரின் திறமையால் 
விளைந்த நல்விளைச்சலாக, இருக்கலாம்!

விளைச்சலில், களையை
யாராவது அறுவடை செய்வார்களா?

பிறரை பாதிக்கும் 
தனிமனித கருத்துக்களும்,
அவ்வண்ணமே!

மனிதம் பேணுவோம்!





Sunday, January 14, 2018




அன்பர் 
அனைவருக்கும் 
தித்திக்கும் 
தைப்பொங்கல் 
தமிழர் திருநாள் 
நல்வாழ்த்துக்கள்!

பொங்கிடும் பொங்கலைப் போல,
இன்பங்கள் எங்கும் தங்கிடட்டும்!


வளங்களும் நலங்களும் சேர்ந்து 
நலமுடன் வாழ, கைக்கொள்ளும் 
முயற்சிகள் யாவும் கைகூடட்டும்!!


 தைப்பொங்கல்  திருநாள் நல்வாழ்த்துக்களுடன் .!

 ஞானா.




Total Pageviews